பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளியால் ஐவர் பலி

பிலிப்பைன்ஸை தாக்கிய இந்த ஆண்டின் மிகச் சக்திவாய்ந்த சூறாவளியால் மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, மின்சார கம்பங்கள் சாய்க்கப்பட்டு பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதோடு இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸின் தென்பகுதியில் உள்ள சியார்கோ தீவில் மணிக்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் 300,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் தாழ்வான பகுதிகளில் மார்பளவு வரை வெள்ள நீர் தேங்கியது.

சூறாவளி காரணமாக தெற்கு பிலிப்பைன்ஸில் வீதி, படகு, ரயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமானப் போக்குவரத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சூறாவளி செல்லும் பாதையில் சுமார் 10,000 கிராமங்கள் இருப்பதாகப் பிலிப்பைன்ஸின் பேரிடர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாண்டில் மட்டுமே பிலிப்பைன்ஸில் 15 முறை சூறாவளி வீசியுள்ளது.

சூறாவளியால் வெள்ளம், நிலச்சரிவுகள் ஆகியவற்றுடன் பெரிய அளவில் சேதம் ஏற்படக்கூடுமென அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

Sat, 12/18/2021 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை