சுவஸ்திகா, துர்க்காவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

இன்று மாலை சரஸ்வதி மண்டபத்தில்

செல்வி சுவஸ்திகா சுவீந்திரன், செல்வி துர்க்கா அசோகன் இருவரின் பரதநாட்டிய அரங்கேற்றம் இன்று (18) மாலை 5.30 மணிக்கு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கலாசூரி திருமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் நடைபெறும் அரங்கேற்ற நிகழ்வுக்கு ஜனாதிபதி சட்டத்தரணி சட்ட மாஅதிபர் சஞ்ஜே இராஜரட்ணம் பிரதம அதிதியாகவும், சிறப்பதிதிகளாக கொழும்பு மகளிர் கல்லூரி அதிபர் ஈஷா ஸ்பெல்ட்டிவைன்ட், தெஹிவளை கேற்வே கல்லூரி அதிபர் அன்டனி செல்லையா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். அணிசேர் கலைஞர்களாக ஸ்ரீ ஆரூரன் (குரலிசை), ஸ்ரீ கண்ணதாசன் (மிருதங்கம்), ஸ்ரீ திபாகரன் (வயலின்), ஸ்ரீ இரட்ணம் ரட்ணதுரை (தாளதரங்கம்), ஸ்ரீ பிரியந்த (புல்லாங்குழல்) ஆகிய கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

 

 

Sat, 12/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை