இணையத்தளத்தின் ஊடான வர்த்தக கட்டமைப்பை பலப்படுத்தல்

அலிசப்ரி – நாமல் தலைமையில் கலந்துரையாடல்

இணையத் தளத்தினூடாக வர்த்தகம் (e - Commerce) மேற்கொள்கையில் காணப்படும் வர்த்தக சட்ட கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக குறிப்பிட்ட தரப்பினருடனான பேச்சுவார்த்தை டிஜிட்டல் தொழில்நுட்ப இராஜங்க அமைச்சரும்  விளையாட்டுத் துறை அமைச்சருமான நாமல் ராஜபக்‌ஷ மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் நீதி அமைச்சில் நடைபெற்றது. ஒன்லைன் ஊடாக வர்த்தகம் மேற்கொள்ளும் எமது நாட்டு பிரதான வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதோடு அவர்கள் இணையத்தளத்தின் ஊடாக வர்த்தகம் மேற்கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளை ஆராய்ந்து புதிய சட்டம் அறிமுகம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளல் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. இதனுடன் நேரடியாக தொடர்புள்ள நிறுவனங்கள் மற்றும் பாவனையாளர்களின் கருத்துக்களை பெற்று உகந்த சட்ட கட்டமைப்பை தயாரிப்பதன் அவசியமும் இங்கு முன்வைக்கப்பட்டது. வர்த்தக சட்ட கட்டமைப்பை (e - Commerce) ஆராய்ந்துள்ள குழு மற்றும் ஒன்லைன் ஊடாக வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளும் நிறுவனங்கள் இது தொடர்பில் மேலும் ஆராய்ந்து சட்ட கட்டமைப்பை பலப்படுத்த வேண்டுமென அமைச்சர்கள் ஆலோசனை வழங்கினர்.

நீதி அமைச்சின் செயலாளர் மாயாதுன்ன, அமைச்சின் மேலதிக செயலாளர் துசார சுரவீர உட்பட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.(பா)

Fri, 12/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை