18 இலட்சத்தை கடந்த பூஸ்டர் தடுப்பூசி ஏற்றல்

ஒரே நாளில் 2,19,997 பேருக்கு தடுப்பூசி

நாட்டில் நேற்று முன்தினம் 2 இலட்சத்து 12,733 பேருக்கு மூன்றாம் பூஸ்டர் தடுப்பூசியாக பைஸர் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 இலட்சத்து 69,758 ஆக அதிகரித்துள்ளது.  நாட்டில் நேற்று முன்தினம், 2,19,997 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. அத்துடன், 1,209 பேருக்கு பைஸர் பூஸ்டர் தடுப்பூசியும், 2,000 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. அதேநேரம், 1,174 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 2,881 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

 

Fri, 12/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை