மண்ணெண்ணெய் அடுப்பின் விலை மும்மடங்காகியது

சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளன.

சமையல் எரிவாயு விநியோகம் சீரான நிலைக்கு திரும்பாததாலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவங்கள்  காரணமாகவும் பொதுமக்கள் மாற்று நடவடிக்கையாக சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மின்சார அடுப்பை நாடி வருகின்றனர். இதனால் அவற்றின் விலைகள் அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

2,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் அடுப்பு ஒன்றின் விலை தற்போது 8,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், புறக்கோட்டை மற்றும் புறநகர்பகுதிகளில் மண்ணெண்ணெய் அடுப்பு இல்லாமையால் நுகர்வோரும், வர்த்தக நிலைய உரிமையாளர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Fri, 12/17/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை