20 நாட்களில் 47,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

டிசம்பர் மாதத்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 47,120 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 152,109 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கூட்டு ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Thu, 12/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை