தென் சீனக் கடலில் கப்பலை ஈடுபடுத்துவதில் சீனா தீவிரம்

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பரப்பில் தன் கப்பல்களை சீனா தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளதால் அப்பிராந்திய கடற்பரப்பில் படைகளின் அமைதிக்கால சமநிலை பெரிதும் மாற்றமடைந்துள்ளதாக வொஷிங்டனைத் தளமாகக் கொண்டுள்ள மூலோபாய மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அந்நிலையத்தின் புதிய அறிக்கையின்படி, தென் சீனக் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கான கப்பல்களை சீனா தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளமையானது கப்பல் போக்குவரத்துக்கான சர்வதேச சட்டத்திற்கும் குறிப்பிடத்தக்க சவாலை ஏற்படுத்தியுள்ளன.

பாரிய துறைமுக வசதிகளுடன் கூடிய சீனா, அண்மைய ஆண்டுகளில் புறக்காவல் நிலையங்களை உருவாக்குவதானது, சர்ச்சைக்குரிய ஸ்பரட்லி தீவுகளுக்குச் செல்லும் ஆயுதக் கப்பல்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரம் 2018 ஒகஸ்ட் முதல் கடல்சார் படையினரின் நூற்றுக்கணக்கான கப்பல்கள் ஸ்பரட்லி தீவுகளைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான கப்பல்களை உருவாக்கவும், அவற்றை ஈடுபடுத்தவுமென சீன அரசால் ஊக்குவிப்பு நிதியுதவி மானியமாக வழங்கப்படுகின்றன.

Thu, 12/23/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை