எதிர்கால சந்ததியையே எரிக்கும் செயலாகும்

பாராளுமன்றத்தில் வியாழேந்திரன் உரை

இரசாயனப் பசளை கோரி ஜனாதிபதி, விவசாய அமைச்சர் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தாலும் நாட்டின் எதிர்கால சந்ததியின் உருவபொம்மைகளே இவ்வாறு எரிகின்றன என்பதை மறந்துவிடக்கூடாதென இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். கமத்தொழில் மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரிசி உட்பட சிறு தானிய உற்பத்திப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மொத்தத் தேசிய உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வீழ்ச்சியடைந்துள்ளது. அதிலிருந்து மீளவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.14,021 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடுகள் முன்னேற கிராமங்கள் முன்னேற்றப்பட வேண்டும். கொரோனாவால் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. உள்ளாடைகளுக்குக் கூட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நிலை குறித்து வெட்கப்பட வேண்டும்.எமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்யும் நிலை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய முன்னேற்றத்துக்கு 72,492 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர், ஜனாதிபதி போன்றோரின் உருவப்பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. ஆனால் இது எதிர்கால சந்ததியின் உருவபொம்மைகளே என்பதை எரிக்கப்படுகின்றன. இரசாயன பசளை பயன்பாட்டால் பாடசாலை மாணவர்களுக்குக் கூட புற்றுநோய் ஏற்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்

Sat, 11/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை