நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு திட்டம்

முகக்கவசம், தடுப்பூசி, இடைவெளி பேணல் தொடரும்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்குடன், பல்வேறு துறைகளின் சேவை நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ள, அனுமதி வழங்க எதிர்பார்த்திருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

திருமண வைபவங்கள், சினிமா திரையரங்குகள், உணவகங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றை சுகாதார வழி காட்டல்களின் கீழ் வழமை போன்று மீண்டும் செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

எவ்வாறாயினும், திறக்கப்படும் இடங்கள் எந்த எல்லைக்குள்ளிருக்க வேண்டும் என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த இடங்கள் பொதுமக்கள் பாவனைக்காக வழமை போன்று திறக்கப்பட்டாலும் கூட, முகக்கவசம் அணிதல், பூரண தடுப்பூசிகளைப் பெற்றிருத்தல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணல் போன்றன குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

Sat, 11/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை