நியூசிலாந்தின் பள்ளிவாசல் தாக்குதல்தாரி மேன்முறையீடு

நியூசிலாந்து கிரைஸ்சேர்ச் பள்ளிவாசல்களில் 51 முஸ்லிம் வழிபாட்டாளர்களை படுகொலை செய்த தாக்குதல்தாரி தம்மீதான ஆயுள் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளார். 2019 தாக்குதலின் பின்னர் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளையின மேலாதிக்கவாதியான 31 வயது பிரென்டன் டரன்ட் மீது கடந்த ஆண்டு பிணை இன்றி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நியூசிலாந்து நீதிமன்றம் ஒன்று ஒருவருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதித்தது முதல் முறையாகும்.

இந்நிலையில் இந்த தண்டனை அவநம்பிக்கைக்குரியது மற்றும் உரிமைச் சட்டங்களை மீறுவதாக உள்ளது என்பதால் இந்தத் தீர்ப்புக்கு எதிராக தமது கட்சிக்காரருக்கு மேன்முறையீடு செய்ய ஆலோசனை வழங்கியதாக பிரென்டனின் வழக்கறிஞர் டோனி எலிஸ் தெரிவித்துள்ளார்.

Tue, 11/09/2021 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை