20க்கு20 கிரிக்கெட்டில் 400 விக்கெட் வீழ்த்தி ரஷித் கான் சாதனை

20க்கு20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை சமீபத்தில் படைத்தார்.

20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் நேற்றுமுன்தினம் ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 124 ஓட்டங்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்திலை அவுட்டாக்கினார். இது சர்வதேசம், உள்ளூர், லீக் உட்பட ஒட்டுமொத்த 20க்கு20 கிரிக்கெட்டில் ரஷித் கானின் 400-வது விக்கெட்டாக (289 ஆட்டம்) அமைந்தது.

இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய பந்துவீச்சாளர், மொத்தத்தில் 4-வது வீரர் என்ற சிறப்பை 23 வயதான ரஷித் கான் பெற்றார்.

20க்கு 20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதல் 3 இடங்களில் மேற்கிந்திய தீவின் வெயின் பிராவோ (553 விக்கெட்), சுனில் நரைன் (425 விக்கெட்), தென் ஆபிரிக்காவின் இம்ரான் தாஹிர் (420 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

Tue, 11/09/2021 - 08:42


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை