மலையகத்தில் அடை மழை; நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நேற்று மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நேற்று (08) மாலை   ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குறித்த பிரதான பாதையில் நுவரெலியாவில் இருந்து சுமார் 4கிலோமீற்றர் தூரத்தில் பிளக்பூல் பகுதியிலேயே இந்த மண் சரிவு ஏற்பட்டது. மண்சரிவு காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் நேற்று மாலை சுமார் 2கிலோமீற்றர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. 

குறித்த பகுதிக்கு உடனடியாக சென்ற போக்குவரத்து பொலிசாரும் பாதை அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளும் மண்சரிவை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

மாலை நேரம் என்பதால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் காரியாலயங்களில் கடமைகளை நிறைவு செய்து கொண்டு தங்களுடைய வீடுகளை நோக்கி பயணித்த அரச தனியார் துறையை சேர்ந்தவர்களும் மாணவர்களும் பெறும் சிரமத்தை எதிர்நோக்கினர்.குறிப்பாக நானுஒயா, லிந்துலை, அக்கரபத்தனை, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த பயணிகளே இந்த மண்சரிவு பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

நுவரெலியா தினகரன் நிருபர்

 

 

 

 

Tue, 11/09/2021 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை