அத்தியாவசிய பொருட்களுடன் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள்

விரைவில் விடுவிக்க நடவடிக்கை

நாட்டில் டொலர் தட்டுப்பாடு காரணமாக உருளைக்கிழங்கு, பருப்பு, பெரிய வெங்காயம், சீனி,நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய ஆயிரம் கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை எல்லையற்ற வகையில் அதிகரித்துள்ளமைக்கு இதுவே காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Fri, 11/26/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை