ஐந்து மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள்

அவதானமாக நடக்குமாறு டாக்டர் அசேல எச்சரிக்கை

புதிய கொரோனா கொத்தணிகள் நாட்டின் 05 மாவட்டங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அனுராதபுரம், அம்பாறை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறான கொத்தணிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார நெறிமுறைகளை மீறி இப் பகுதிகளில் நடைபெறும் திருமணங்கள், மத நடவடிக்கைகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளால் இந்த கொத்தணிகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் தற்போது தினசரி 700 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இறப்பு எண்ணிக்கையும் 20 ஆக காணப்படுகிறது. இது சுகாதார அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாடு இயல்பு நிலைக்கு வரும் வரை மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Sat, 11/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை