பாடகி யொஹானிக்கு பாராளுமன்றில் கௌரவம்

செவ்வாயன்று நடத்த ஏற்பாடு

புதிய தலைமுறைப் பாடகி யொஹானி டி சில்வாவை கௌரவிக்கும் நிகழ்வொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்துள்ளதாக ஒன்றியத்தின் செயலாளரும் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ,சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்jதன,பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட்19 நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெனாண்டோ புள்ளே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றி இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாக குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார். யொஹானி பாடிய 'மெனிகே மகே ஹிதே' பாடல் தற்பொழுது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகவும் பிரபலமடைந்துள்ளது தெரிந்ததே.

 

 

Sat, 11/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை