இரு வாரங்களில் 08 இலட்சம் சிலிண்டர்கள் வந்தடைந்தன

தட்டுப்பாடு இவ்வாரம் முதல் நீங்குகிறது

இந்த வாரத்திற்குள் 08 இலட்சத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜனக பத்திரத்ன நேற்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏழு நாட்களில் நிறுவனம் ஏற்கனவே 07 இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை உள்நாட்டு சந்தைக்கு விநியோகித்துள்ளது. சமீபத்திய சீரற்ற காலநிலை, மண்ணெண்ணெய் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால் இலங்கையில் எரிவாயு தேவை அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் எரிவாயு ஏற்றிவந்த கப்பல் நேற்று நாட்டுக்கு வந்தடைந்ததாகவும், எரிவாயுவை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனக பத்திரத்ன கூறினார்.

இதேவேளை, காஸ் விநியோகம் சீராக இடம்பெற சுமார் 150,000 சிலிண்டர்கள் தேவைப்படுவதாக எரிசக்தி துறை வட்டாரங்கள் கூறுகின்றன. சமீபத்திய வாரங்களில் விநியோக நெருக்கடி காரணமாக லிட்ரோ மற்றும் லாப்ஸ் காஸ் விற்பனை நிலையங்களில் வரிசைகள் காணப்பட்டன. சந்தைக்கு வந்த காஸ் விரைவாகத் தீா்ந்துபோனது. இது பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு லிட்ரோ மற்றும் லாப்ஸ் காஸ் சந்தைகளில் இலகுவாகக் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அரசு வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Mon, 11/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை