மக்களது செயற்பாடுகளால் சுகாதார தரப்பு கவலை

டாக்டர் அசேல குணவர்தன தெரிவிப்பு

சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து மக்களின் செயற்பாடுகள் கவலையளிப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார சட்டங்கள் மற்றும்  வழிமுறைகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு மீண்டும் தாம் நாட்டு மக்களிடம் தயவுடன் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது தினமும் 500 புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றப்படாவிட்டால் மீண்டும் எச்சரிக்கை நிலையை எதிர்நோக்க நேரிடுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லோருக்குமே மகிழ்ச்சியான பயணங்களை மேற்கொள்வதற்கு விருப்பம்தான், ஆனாலும் மேலும் இரண்டு மாதங்களுக்கு கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டியுள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத நிலைமையே காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர், ஊரடங்குச் சட்டம் இல்லாதபோது மக்களுக்கு பின்னால் செல்ல முடியாது என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 10/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை