உள்நாட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட தொற்றாளர்கள் எவரும் உயிரிழக்கவில்லை

ஆயுர்வேத திணைக்களம் தெரிவிப்பு

உள்நாட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட எந்தவொரு கொரோனா தொற்றாளர்களும் உயிரிழக்கவில்லை என ஆயுர்வேத திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் இதுவரை ஆயிரத்து 33 படுக்கைகள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 835 பேர் தற்போது சிகிச்சைகளைப் பெற்று வருவதாகவும் ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இது வரையான காலப்பகுதியில் மூவாயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அவர்களில் இரண்டாயிரத்து 843 பேர், எந்தவித சிக்கல்களும் இன்றி குணமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, 9 மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில், தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்கு ஆயுர்வேத நிலையங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரை குணப்படுத்துவதற்காக, சுதேச வைத்திய மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய உள்நாட்டு வைத்தியத்தின் ஊடாக, கொரோனா தொற்றைக் குணப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக அபேகுணவர்தன கூறியுள்ளார்.

Sat, 08/14/2021 - 08:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை