சீனாவில் பயங்கர வெள்ளம்: ‘சிவப்பு எச்சரிக்கை’ அறிவிப்பு

சீனாவில் கனத்த மழையால் பெருகிய வெள்ளத்தில் 21 பேர் உயிரிழந்திருப்பதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மத்திய ஹுபெய் மாநிலத்தின் 5 நகரங்களில் ‘சிவப்பு எச்சரிக்கை’ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிலிருந்து சுமார் 6,000 பேர் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2,700க்கும் அதிகமான வீடுகளும் கடைகளும் வெள்ளத்தில் சேதமடைந்தன.

மின்சார விநியோகம், போக்குவரத்து, தொலைத்தொடர்புச் சேவைகள் ஆகியவையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக சின்ஹுவா தெரிவித்தது.

அத்தோடு, ஹுபெய் மாநிலத்தில் சுமார் 8,110 ஹெக்டர் விவசாய நிலம் பாழானது. வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிப்படைந்த இடங்களுக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த இழப்பு சுமார் 16.67 மில்லியன் டொலர் என சைனா டெய்லி செய்தி நிறுவனம் தகவல் அளித்தது.  

கடந்த ஒரு மாதமாக சீனாவில் பெய்து வரும் பலத்த மழைக்கு 300க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Sat, 08/14/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை