அவுஸ்திரேலிய தலைநகரில் ஒரு வாரம் பொது முடக்கம்

அவுஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் ஓர் ஆண்டுக்கு பின் முதல் முறை கொரோனா தொற்று சம்பவம் பதிவானதை அடுத்து அந்த நகர் ஒரு வாரத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை அமுலுக்கு வந்த இந்த பொது முடக்கம் 400,000 மக்கள் வாழும் ஒட்டுமொத்த தலைநகரிலும் நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய காரணங்களுக்கு மாத்திரமே குடிமக்கள் வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். முடக்கநிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து பேரங்கடிகளில் மக்கள் முண்டியடிக்க ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நோய்ப்பரவல் தொடங்கியதிலிருந்து கன்பராவில் மிக மோசமான சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் அண்ட்ரூ பார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நபர், வைரஸ் தொற்றியிருந்த காலத்தில் சமூகத்தில் நடமாடியதாக அவர் கூறினார்.

வேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா போராடி வருகிறது. இதனால் அந்நாட்டில் மிகப்பெரிய நகரங்களாக சிட்னி மற்றும் மெல்பர்னில் முடக்க நிலை அமுலில் இருப்பதோடு அதன் கட்டுப்பாடுகள் தற்போதும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிட்னி நகரில் வைரஸ் தொற்றுக் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த கூடுதலான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பணியமர்த்தப்படவுள்ளனர்.

Sat, 08/14/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை