தலிபான்களுடன் தொடர்புடைய வட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்

தலிபான் அமைப்புடன் தொடர்புடைய வட்ஸ்அப் கணக்குகளை முடக்குவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய தலிபான், தனது ஆட்சி நிர்வாகத்தில் உதவ வட்ஸ்அப் சேவையை அணுகியுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டது.

அமெரிக்கச் சட்டப்படி, தலிபான் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கின் ஆபத்தான அமைப்புகளுக்கான கொள்கைகள்படி, தலிபானுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிறுவனப் பேச்சாளர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

மாறிவரும் சூழலை, கவனமாக கண் காணித்து வருவதாக பேஸ்புக் தெரிவித்தது.

நிறுவனத்தின் முடிவைத் தலிபான் பேச்சாளர் சாடினார். பேஸ்புக் ஆப்கானிஸ்தானில் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

தலிபான் அமைப்பு குறித்த விதிமுறைகளைத் தெளிவுபடுத்த சமூக ஊடகங்கள் முனைந்துவரும் வேளையில், யூடியூப் நிறுவனமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

தலிபான் அமைப்புக்கு சொந்தமானதாக நம்பப்படும் கணக்குகள் மீது தடை விதிக்கப்படுவதாக யூடியூப் கூறியது.

 

Thu, 08/19/2021 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை