திங்கள் முதல் பாணின் விலை ரூ. 5 இனால் அதிகரிப்பு

திங்கள் முதல் பாணின் விலை ரூ. 5 இனால் அதிகரிப்பு-Price of Bakery Products will be Increased from August 23-Bakery Owners' Association

- ஏனைய பேக்கரி பொருட்களுக்கு ரூ. 10 முதல் ரூ. 100 வரை அதிகரிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் பாணின் விலையை ரூ. 5 இனால் அதிகரிக்கவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை ரூ. 10 இனாலும் ஒரு கிலோ கிராம் கேக்கின் விலையை ரூ. 100 இனாலும் அதிகரிக்கவுள்ளதாக, சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் விலையேற்றம், பேக்கரி உற்பத்திகளுக்கான மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக பேக்கரி பொருட்களின் உற்பத்திகளை தயாரிப்பதற்கான செலவு அதிகமாக இருப்பதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Thu, 08/19/2021 - 15:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை