வெதுப்பகத்திற்கு விறகு வெட்டச் சென்ற நபர் உயிரிழப்பு

விஸ்வமடு றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு நேற்றுக்(18) காலை விறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விஸ்வமடு வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான

41 வயது சமரகோன் என்பவரே உயிரிழந்துள்ளார். விறகு வெட்டிக்கொண்டிருந்தவருக்கு தேனீர் எடுத்து சென்ற போதே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து புதுகுடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை புதுகுடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

 

 

Thu, 08/19/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை