ரிசாத் பதியுதீனை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

மனோ கணோசன் எம்.பி கோரிக்கை

அரசியல் காரணங்களுக்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை விடுதலைச் செய்வதற்கான நடவடிக்கைகயை விரைவாக அரசாங்கம் எடுக்க வேண்டுமென தமிழ் முற்போற்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 சம்பள உயர்வு வழங்கப்பட்டால் 25000 ரூபா மாதச் சம்பளம் கிடைக்க வேண்டும். ஆனால், 10, 12 நாட்கள்தான் வேலை வழங்கப்படுகிறது. கம்பனிகளின் தேவைளுக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது.

புதிய வேதன திருத்தச் சட்டத்தில் 25 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டுமெனவும் குறைந்தப்பட்ட சம்பளம் 500 ரூபா என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை 1000 ரூபாவாக மாற்றினால்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாட் சம்பளம் கிடைக்கும். இவ்வாறு இல்லாமையால்தான் கம்பனிகள் நீதிமன்றம் சென்றுள்ளன .

நீதிமன்றில் நீதியான தீர்ப்பொன்று கிடைக்காவிட்டால் விசேட சட்டமொன்றை கொண்டுவருதாக தொழில் அமைச்சர் கூறியுள்ளார். அதனை வரவேற்கிறோம். அவ்வாறான தீர்மானத்துக்கு இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவளிப்போம். என்றாலும் குறைந்தப்பட்ட சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்தினால் அது வரவேற்கப்பட வேண்டியதாகும். வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் வயதெல்லையை 16இல் இருந்து 18ஆக உயர்த்த நடவடிக்கையெடுக்கப்பட வேண்டுமென்பதையும் வரவேற்கிறோம். நுவரெலியாவில் இருந்துதான் அதிகமாக வீட்டு பணி வேலைக்கு பணியாளர்கள் வருகின்றனர். நுவரெலியாவுக்கு பொறுப்பான பொலிஸ் தலைமை அதிகாரிக்கு இந்த விடயத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தொழில் அமைச்சர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை, 102 நாட்களுக்கும் அதிகமாக எவ்வித விசாரணைகளுமின்றி தம்மை தடுத்துவைத்துள்ளதாக ரிசாத் பதியுதீன் எம்.பி. கூறியுள்ளார். அரசியல் காரணங்களுக்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தடுத்துவைக்க கூடாது. அவருக்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாது தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாவிடின் விடுதலைச் செய்யப்பட வேண்டும். இன்று அவருக்கு இடம்பெற்றுள்ள சம்பவம் நாளை எமக்கும் நடக்கலாம். ஆகவே, அரசியல் தேவைகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை 100 நாட்களுக்கும் அதிகமாக தடுப்புக்காவலில் வைத்திருப்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்துக்கும் முரணானதாகும். இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விரைவாக தீர்மானமொன்றை எடுத்து அவரை விடுதலைச் செய்ய வேண்டும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

 

Thu, 08/05/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை