இலங்கை - ரஷ்யா நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஆறு வருடங்களுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான நேரடி விமான சேவை நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 534 ரக விமானம், மொஸ்கோவ் நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றுக் காலை வந்தடைந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று வந்த விமானத்தில் உள்நாட்டுமற்றும் வெளிநாட்டு சுற்றுலா ப்பயணிகள் 51 பேரும் இலங்கைத் தூதுவரும் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் வாரந்தோறும் இரவு 10.20 மணிக்கு மொஸ்கோவ் நகரில் இருந்து புறப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Mon, 08/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை