யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடுப்பூசி அடுத்த வாரம் முதல்

யாழ்ப்பாணத்தில் கொவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த யூலை மாத ஆரம்பத்தில் முதலாவது தடவை தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களிற்கான இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09 ஆம், 10 ஆம், 11 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.  

அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும்.

பொதுமக்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதல் தடவை தடுப்பூசி பெற்றுக் கொண்டமையினை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையினை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும், மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் உள்ள யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதனை போன்றே ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை இரண்டாவது தடுப்பூசிகளினை பெற்றுக்கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவர்களுக்கு வழங்குவதற்காக பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. 

யாழ்.விசேட நிருபர்  

 
Fri, 08/06/2021 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை