முன்னாள் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொவிட் தொற்று உறுதி

முன்னாள் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொவிட் தொற்று உறுதி-Ranjan Ramanayake Tested Positive for COVID19

தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், சிறைச்சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவருக்கு அவசியமான சிகிச்சைகள், குறித்த சிகிச்சை மையத்தில் வழங்கப்படுவதாக, சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்த ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் அவரது உறவினர் வீடொன்றின் மரண வீடொன்றிற்கு, அழைத்து வரப்பட்டிருந்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஹரீன் பெனாண்டோ எம்.பி. ரஞ்சன் ராமநாயக்கவுடன் உரையாடலில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது தான் சுய தனிமைப்படுத்தலுக்கு ஈடுபட்டுள்ளதாக ஹரீன் பெனாண்டோ தனது ட்விற்றர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

 

 

Fri, 08/06/2021 - 15:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை