வழி தவறிய யானைக் கூட்டத்தை வசிப்பிடம் திரும்பச்செய்ய முயற்சி

வழி மாறிச் சென்ற யானைக் கூட்டத்தை வசிப்பிடம் திரும்பச் செய்யும் முயற்சிக்கு சீனாவின் யுனான் வனத்துறை தீயணைப்பாளர்கள் சுமார் 36 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

யுனான் மாநிலத்திலுள்ள ஸீஷுவாங் பன்னா தேசிய இயற்கைப் பாதுகாப்புப் பகுதியில் இருந்த அந்த ஆசிய வகை யானைகள், ஒரு நாளைக்கு 30 கிலோமீற்றர் தூரம் வரை நடக்கக்கூடியவை.

ஆளில்லா வானூர்திகள் கொண்டு அவை கண்காணிக்கப்படுகின்றன. யானைக் கூட்டம் ஒரு கிராமத்தை அணுகும்போது, கிராமவாசிகள் வீட்டிலேயே இருக்கும்படி வலியுறுத்தப்படுகின்றனர்.

யானைகள் மீது மின்சாரம் பாயாமல் இருக்கவும், தீச் சம்பவங்கள் நேராமல் இருக்கவும் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது.

பின்னர், வாழைப்பழங்கள், உணவுப் பொருட்கள் ஆகியவை கொண்டு அவை ஊரைவிட்டு வெளியேற்றப்படுகின்றன.

அந்த யானைக் கூட்டம் இதுவரை சுமார் 700 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்துள்ளது. ஆனால், அவை வசிப்பிடம் திரும்ப இன்னும் சில நூறு கிலோமீற்றர் தூரம் உள்ளது.

குளுமையான வானிலை, அவற்றின் பயணத்தை விரைவுபடுத்தும் என நம்பப்படுகிறது.

Fri, 08/06/2021 - 18:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை