கல்வியமைச்சருடனான சந்திப்பில் திருப்தியடைந்துள்ள ஆசிரியர் சங்கம்

அதிபர், ஆசிரியர்கள் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்த்தன நியமிக்கப்பட்ட பின்னர் தொழிற்சங்கத்துடன் முதன்முறையாக நேற்று முன்தினம் (26) பேச்சுவார்த்தை  நடைபெற்றது. இதன்போது, அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவை உபகுழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளுடன் ஆசிரியர் சங்கத்தின் பரிந்துரைகளையும் இணைத்து எதிர்வரும் திங்கட் கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு தொழிற்சங்கம் அமைச்சரிடம் கோரியுள்ளது.

பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.

 

Sat, 08/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை