ஒக்ஸிமீட்டருக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்

போலிகளுக்கு முடிவு; ரூ.3990க்கு வழங்க திட்டம்

இரத்தத்திலுள்ள ஒக்சிஜனின் அளவை கணிப்பிடும் ஒக்ஸிமீட்டர் இயந்திரத்திற்கு கட்டுப்பாட்டு விலையை அறிவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஒக்ஸிமீட்டருக்கான கேள்வி தற்போது அதிகரித்துள்ளதால், பல்வேறு விலைகளில் ஒக்ஸிமீட்டர் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் ஒக்சிஜனின் அளவை தாமாகவே கணிப்பிடுவதற்கு ஒக்ஸிமீட்டர் தற்போது அத்தியாவசியமான இயந்திரமான காணப்படுகின்றது.

நாட்டில் தற்போது போலியான ஒக்ஸிமீற்றர்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஒக்ஸிமீற்றர் இறக்குமதியாளர்களில் ஒருவரான ஸ்ரீமால் விஜேதுங்க (26) தெரிவித்திருந்தார்.

குறிப்பாக இலங்கையில் 3,990 ரூபாவிற்கு ஒக்ஸிமீட்டரை விற்பனை செய்ய முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், வடக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒக்ஸிமீட்டர் சுமார் 7000 ரூபா வரையான பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தையில் போலி ஒக்ஸிமீட்டர் விற்பனை செய்யப்படுகின்றமை மற்றும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படுகின்றமை குறித்து இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Sat, 08/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை