நிலைமையை கட்டுப்படுத்தவும்; இல்லையேல் விளைவு பாரதூரம்

சுகாதார பணியாளார்களையும் இழக்க நேரிடும் –தாதிமார் சங்கம் எச்சரிக்கிறது

கொவிட் பரவல் நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் உங்களுக்கு பணியாற்றுகின்ற சுகாதார பணியாளர்களை நீங்கள் இழக்கவேண்டியிருக்கும் என தாதிமார் சங்கம் எச்சரித்துள்ளது.

தற்போதைய கொவிட் பரவல் காரணமாக சுகாதார பணியாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிசிச்சை அளிப்பதற்கு சுகாதார பணியாளர்கள் இல்லாத நிலையேற்படலாம் என பொதுச்சேவை ஐக்கிய தாதிமார் சங்கத்தின் உபதலைவர் புஸ்பா ரம்யானி டி சொய்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் இந்த நிலையேற்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

விடைகளை காணவிட்டால் நிலைமை பாரதூரமானதாக மாறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Sat, 08/21/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை