சட்டவிரோத ஒன்றுகூடலால் கொரோனா தொற்று அதிகரிப்பு

Dr.ஹேமந்த ஹேரத்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஏற்பாடு செய்யப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளால் சமூகத்திலிருந்து பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார விதிமுறைகள் மேலும் மீறப்பட்டால், எதிர்காலத்தில் தொற்றுநோய் மோசமடைவதைத் தடுப்பது கடினமான பணியாகும் என சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமூக பரவல் மற்றும் சமூகத்திற்குள் பதிவாகும் தொற்றாளர்கள் என்பன தொழில்நுட்ப ரீதியாக இரு வெவ்வேறு சொற்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும் போது, பொது மக்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sat, 08/21/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை