அமெரிக்க பாராளுமன்றம் அருகே வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

அமெரிக்க பாராளுமன்ற கட்டடத்திற்கு அருகே கனரக வாகனம் ஒன்றில் வெடிபொருட்களை வைத்திருப்பதாக அச்சுறுத்திய ஆடவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தால் 5 மணி நேரத்திற்கும் மேலாக இழுபறி நிலை நீடித்தது. காலை ஒன்பதே கால் மணி வாக்கில் ரோஸ்பெரி என்னும் 49 வயது ஆடவர் தாம் வெடிபொருளைக் கொண்டுள்ள கனரக வாகனத்தை அரசாங்கக் கட்டடம் அருகே நிறுத்திவிட்டுக் காத்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

ஆடவர் தம் கையில் வெடிப்பொருளை வெடிக்கச் செய்யும் கருவியுடன் நின்றதை அதிகாரிகள் கண்டனர். அதைத்தொடர்ந்து அந்தச் வீதிகள் மூடப்பட்டன. சுற்றியுள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஆடவர் சரணடைந்தார். வாகனத்தில் வெடிபொருள் இருந்ததா என்பது பற்றி பொலிஸார் தகவல் வெளியிடவில்லை.

ரோஸ்பெரிக்கு மனநலப் பிரச்சினைகள் இருப்பதாக அவரது முன்னாள் மனைவி தெரிவித்தார். பலமுறை தம்மீது துப்பாக்கியை வைத்து பயமுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Sat, 08/21/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை