570 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்; ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

ஆப்கானில் பல்வேறு நகரங்களில் ஆப்கானிய படையினர் நடத்திய மோதல் வேட்டைகளில் 570க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் 309 தலிபான்கள் காயமடைந்ததாகவும் காபுல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நங்கார்ஹார், குண்டூஸ், பண்டாக்ஷிலன், பக்டிகா, கந்தஹார், ஹெல்மான்ட், தாக்கார் உட்பட பல மாகாணங்களில் ஆப்கானிய படையினர் மேற்கொண்ட தேடியழிக்கும் நடவடிக்கைகளில் தலிபான்கள் மரணமடைந்ததாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதையடுத்து அரச படையினருக்கு எதிராக தலிபான்கள் தமது தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளனர்.

Wed, 08/11/2021 - 10:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை