மீன்பிடிப் படகில் வந்த 539 குடியேறிகள் மீட்பு

லம்படுசா தீவுக்கு அருகில் மீன்பிடிப் படகு ஒன்றில் இருந்த 539 தஞ்சக்கோரிக்கையாளர்களை இத்தாலி கடலோரக் காவல்கடை கப்பல்கள் மீட்டுள்ளன.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த மீட்பு நடவடிக்கை இத்தாலி தீவில் ஒரே நாளில் இடம்பெற்ற மிகப்பெரிய மீட்பு நடவடிக்கையாக இருந்தது.

இதில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருந்துள்ளனர். சில குடியேறிகள் லிபியாவில் இருந்து மத்தியதரைக் கடலை கடந்து வந்திருப்பதோடு, வன்முறைகளுக்கு முகம்கொடுத்ததற்கான அடையாளங்களும் அவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இத்தாலி வழக்குத் தொடுநர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பாவுக்குச் செல்ல படகு வரும் வரை காத்திருந்த பலரும் அங்கு தாக்குதல்களுக்கு முகம்கொடுத்திருப்பதாக மனிதாபிமானக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு கடலோரக் காவல்படை கப்பல்கள் மற்றும் இத்தாலி வர்த்தகக் குற்றப் பிரிவு பொலிசாரின் படகின் மூலம் இவர்கள் மீட்கப்பட்டு லம்படுசா தீவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவை அடைய விரும்பும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் பிரதான தளமாக லம்படுசா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை