மாசடைந்த தடுப்பு மருந்தை போட்ட இரு ஆடவர் மரணம்

ஜப்பானில் மொடர்னா நிறுவனத்தின் மாசடைந்த கொவிட்-19 தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொண்ட இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் ஜப்பானில் விநியோகிக்கப்பட்ட மொடர்னா நிறுவனத் தடுப்புமருந்தின் சில தொகுப்புகளில், மாசு கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனால், அந்தத் தொகுப்பு மருந்துகளை மக்களுக்குப் போட வேண்டாம் என்று கடந்த வியாழக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தடுப்புமருந்து மாசடைந்துள்ளது என்ற தகவல் வெளியாகும் முன்னர், அது சிலருக்குப் போடப்பட்டிருந்தது.

உயிரிழந்த இருவம் 30 வயதுக்கு மேற்பட்ட ஆடவர்கள் என்றும் இரண்டாவது தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட சில நாட்களில் அவர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

அவர்களின் மரணத்துக்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது.

தடுப்புமருந்தில் உலோகத் துகள்கள் கலந்திருந்ததாய் நம்பப்படுவதாக, ஜப்பானிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டது. ஜப்பான், 1.63 மில்லியன் அளவுள்ள மொடர்னா தடுப்புமருந்தின் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

அதனால் 860க்கும் மேற்பட்ட தடுப்பு மருந்து நிலையங்களில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை