உலகின் வடகோடியில் இருக்கும் தொலைதூரத் தீவு கண்டுபிடிப்பு

கீரின்லாந்து கடற்கரைக்கு அப்பால் உலகின் வடகோடியில் தொலைதூரத்தில் இருக்கும் தீவை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுவரை உலகிலேயே மிகவும் வட கோடியில் இருக்கும் தீவு என்று நம்பப்பட்ட ஊடாக் தீவில் மாதிரிகளை சேகரிப்பதற்காக கடந்த ஜூலை மாதம் விஞ்ஞானிகள் இந்தத் தீவைச் சென்றடைந்தனர். ஊடாக் தீவு 1978இல் கண்டறியப்பட்டது.

ஆனால் அந்தத் தீவுக்குச் சென்று திரும்பிய பின் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய ஆர்டிக் தீவுகளின் நிலையை பதிவு செய்வதற்கான பொறுப்பில் உள்ள டென்மார்க் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் சென்ற தீவு, ஊடாக் தீவிலிருந்து மேலும் 800 மீற்றர் வடக்கே இருப்பது தெரியவந்தது.

60 x 30 மீற்றர் அளவுள்ள இந்தத் தீவுதான் வட துருவத்துக்கு மிகவும் அருகிலுள்ள நிலப்பகுதி என்று அவர்கள் கூறுகிறார்கள்.

கிரீன்லாந்து டென்மார்க்கின் கட்டுபாட்டில் உள்ள சுயாதீன ஆர்டிக் பிரதேசமாகும்.

Mon, 08/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை