கொரோனா பரவல் ஆரம்பித்தது முதல் எம்.பிமார் 25 பேருக்கு இதுவரை தொற்று உறுதி

இலங்கையில் கொவிட்19 வைரஸ் பரவ ஆரம்பித்த நாளிலிருந்து தற்போது வரை 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று (30) குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்னவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் பந்துல குணவர்தன, ஜானக வக்கும்புர மற்றும் அசங்க நவரத்ன ஆகியோர் மாத்திரமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tue, 08/31/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை