இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 522 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 23 மாவட்டங்களில் 522 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-522 Vaccination Centers-25 Districts-Aug-31-15000 Sputnik V Arrived

- கண்டி மக்களுக்காக 15,000 Sputnik V டோஸ்கள் வந்தடைந்தன

இன்றையதினம் (31) நாடு முழுவதும் 25 மாவட்டங்களிலும் 522 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமைய, இன்று (31) காலை ரஷ்ய தயாரிப்பு கொவிட்-19 Sputnik V தடுப்பூசியின் 15,000 டோஸ்கள் இலங்கையை வந்தடைந்திருந்தன.

178 கி.கி. எடை கொண்ட இந்த தடுப்பூசிகள், ரஷ்யாவின் மஸ்கட் நகரிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் ஏற்கனவே Sputnik V தடுப்பூசி டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக இத்தொகுதி பயன்படுத்தப்படவுள்ளது.

இன்றையதினம் (31) நாட்டில் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள்

Tue, 08/31/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை