இந்திய பிரதமர் உள்ளிட்ட குவாட் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் இவ்வருட இறுதியில் கலந்துரையாடல்

புதுடெல்லி: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வருட இறுதியில் இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் உச்சி மாநாடொன்றை நடாத்தவுள்ளார். இந்த உச்சி மாநாட்டுக்கான திகதி தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வௌியாகவில்லை. என்றாலும், இது நேரில் நடைபெறும் முதல் குவாட் மாநாடாக அமையும்.

ஜனாதிபதி ஜோ பைடன் ஓவல் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பெற்ற பின்னர் அவருடன் உரையாடிய முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடியும் விளங்குகிறார்.

ஆசிய சொசைட்டி சிந்தனைக் குழுவால் நடத்தப்பட்ட நிகழ்வில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் கர்ட் கெம்ப்பெல் இவ்வருட இறுதியில் இடம்பெறும் இந்த நிகழ்வு தொடர்பான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டார். ‘இக்கூட்டம் தடுப்பூசி இராஜதந்திரம் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பில் தீர்க்கமான உறுதிப்பாட்டைக் கொண்டுவரும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவையும் அமெரிக்காவையும் ஒரு இருதரப்பு ஈடுபாட்டுடன் இந்த உச்சி மாநாடு இணைக்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனாலும்

ஒரு பில்லியன் ஜொன்சன் & ஜொன்சன் கொவிட்19 தடுப்பூசிகளை இந்தோ - பசுபிக் நாடுகளுக்கிடையில் 2022 இல் விநியோகிக்க குவாட்டின் இறுதி மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்த சூழலிலும் இத்திட்டம் நடைமுறையில் இருந்தது என்றும் காம்ப்பெல் கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் விரிவாக்கத்திற்கு எதிரிடையாக குவாட் பார்க்கப்படுகிறது. இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குவாட் தலைவர்களின் மெய்நிகர் உச்சிமாநாட்டின் போது இது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடினர்.

Wed, 07/28/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை