கொவிட் -19: வியட்நாமில் முடக்கத்துடன் ஊரடங்கு

வியாட்நாமின் ஹோ சி மின் சிட்டியில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்படுவர்.

அதிகரிக்கும் கொவிட் - 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வியாட்நாம் எடுத்திருக்கும் கூடுதல் முயற்சி இது. இம்மாதத் தொடக்கத்தில் ஹோ சி மின் சிட்டியில் முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

மருத்துவ அவசரத் தேவைகளுக்கும் உணவுக்கும் மட்டுமே நகரைச் சேர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் நடப்புக்கு வந்த ஊரடங்கின் மூலம், மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை கண்டிப்பாக அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அது எப்போது முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு வியாட்நாம் கொவிட்-19 வைரஸ் பரவலைக் வெற்றிகரமாகக்

கட்டுப்படுத்தியது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் அதிகமான வைரஸ் தொற்றுச் சம்பவங்களும் இறப்புகளும் பதிவாகியுள்ளன.

வியாட்நாமில் ஏப்ரல் மாதம் முதல் சுமார் 101,000 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

Wed, 07/28/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை