அரசுக்கு எதிராக கொழும்பில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம்

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் சட்ட விரோத கைதுகளை கண்டித்தும் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதன் போது அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியிலும் ஈடுப்பட்டனர்.

ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் நாட்டின் கல்விக்கட்டமைப்பை சீர்குலைக்கும் எனவும் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டத்தை பயன்படுத்தி முடக்குகின்றதாகவும் தெரிவித்து இவ் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

Tue, 07/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை