தமிழகத்தில் இலங்கை மாணவன் கின்னஸ் சாதனை

தமிழகத்தின் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

கும்மிடிப்பூண்டியிலுள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் வசித்து வருகின்ற 16 வயதான ரஞ்சன் திவ்வியேஷ் என்ற மாணவன் யோகாசனத்தில் டிம்பாசனம் என்ற ஆசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளதாக ‘த ஹிந்து’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் உக்ரைனைச் சேர்ந்த இளம்பெண் க்ருடாஸ் ருசியானா என்பவர் டிம்பாசனம் ஆசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 24 பலூன்களை உடைத்து நிலைநாட்டியிருந்த கின்னஸ் சாதனையை இந்த மாணவன் முறியடித்துள்ளார். திவ்வியேஷின் 05 வருட யோகா பயிற்சியின் விளைவாக டிம்பாசனம் மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைக்கக்கூடியாக இருந்துள்ளது.

Tue, 07/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை