அரசியல் இலாபம் கருதி எதிரணி ஆர்ப்பாட்டம்

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காமல் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக எதிரணி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். தொற்று பரவல் நிலைமையை அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த வேண்டாமென எதிரணியை கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், கடந்த 18 மாதங்களாக நாம் எரிபொருள் விலைகளை உயர்த்தவில்லை. எரிபொருள் பெரல் விலை உச்ச அளவு அதிகரித்துள்ளது. நாமும்

கடந்த காலத்தில் எரிபொருள் விலை உயர்வு மாத்திரமன்றி கப்பல் வரும் வரை காத்திருக்க நேரிட்டது. எரிபொருள் பெற வரிசையில் நிற்க நேரிட்டது.

05 நாட்கள் எரிபொருளின்றி இருந்தோம். எரிவாயு இன்றி ஒரு வாரம் இருந்தோம். ஆனால் எமது ஆட்சியில் ஒருநாள் கூட எரிபொருளுக்காக வரிசையில் இருக்கவில்லை. எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக எதிரணி ஆர்ப்பாட்டம் செய்தது. ஆனால் அதில் பங்கேற்ற எம்.பிக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நடந்தார்களா?முகக் கவசம் கூட அணியவில்லை. கொரோனா சட்டத்தை மீறி செயற்பட்டார்கள என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 06/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை