தேர்தல் மறுசீரமைப்பு கலப்பு முறைமைக்கு மனோ இணக்கமில்லை

சுப்பிரமணியம் நிஷாந்தன்

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை கலப்பு முறை என்ற அடிப்படையில் முன் னெடுக்க

வேண்டுமென்பது தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடாக இருந்தபோதும், தமிழ் மக்கள் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. கலப்புமுறை என்ற அடிப்படையின் கீழ் தேர்தல் மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கத்தைத் தெரிவித்திருந்தனர். எனினும், தான் இந்த நிலைப்பாட்டுடன் இணங்க முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சுட்டிக்கட்டியிருந்தார். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை

தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும், தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு அதன் தலைவர் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கடந்த திங்கட்கிழமை கூடியபோதே இவ்விடயம் பற்றிக்கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஜலை 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Thu, 06/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை