ஆயிரக்கணக்கான கால்பந்து இரசிகர்கள் தனிமைப்படுத்தல்

அவுஸ்திரேலியாவில் கால்பந்தாட்டப் போட்டியைக் காணச் சென்ற ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரான மெல்பர்னில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் கால்பந்துப் போட்டிகளைக் காணச் சென்றிருந்தார்.

அதனால், போட்டியைக் காணச் சென்ற பார்வையாளர்கள் அனைவரும் கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மெல்பர்ன் நகரில் 15 பேருக்குக் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கால்பந்தாட்டத்தைக் காண சுமார் 23,000 பேர் சென்றுள்ளனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கானோர் தனிமைப்படுத்திக்கொள்ளும்படி கூறப்பட்டது.

அதற்கமைய, பரிசோதனை முடிவுகளில் தொற்று இல்லை என்பது உறுதியாகும்வரை அவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். 

Thu, 05/27/2021 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை