கிராம அலுவலரும் மனைவியும் யானை தாக்கி பலி

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் முழங்காவில் கிராம அலுவலரும் அவரது மனைவியும் நேற்று முன்தினம் இரவு யானை தாக்கி பலியாகியுள்ளனர். 

நேற்று முன்தினம் இரவு ஏழு மணியளவில் இருவரும் சைக்கிளில்   பயணித்துக்கொண்டிருந்த போது முழங்காவில் பல்லவராயன் கட்டுச் சந்தி வீதியில் இருவரும் விழ்ந்து கிடப்பதனை கண்டுள்ளனர். இவர்கள் இராணுவத்தின் உதவியுடன் அம்பியூலன்ஸ் மூலம் கிராம அலுவலரை முழங்காவில்  வைத்தியசாலைக்கும் கிராம அலுவலரின் மனைவியை பட்டா ரக வாகனத்தில் முழங்காவில் வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். கிராம அலுவலரின் மனைவியை அங்கிருந்து   யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போது அவர் அங்கு மரணமடைந்துவிட்டார். கிராம அலுவலர் சம்பவ இடத்திலேயே இறந்திருந்ததாக   தெரிவிக்கின்றனர்.   கிராம அலுவலகரின் மனைவியின் மரண விசாரணை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற போது, யானை தாக்கியதற்கான அடையாளங்கள் உடலில் காணப்பட்டதாக திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில்  இரண்டு பிள்ளைகளின் பெற்றோர்களான கிராம அலுவலர் பாலசிங்கம் நகுலேஸ்வரனும் அவரது மனைவியும் பலியாகியுள்ளனர். 

கிளிநொச்சி குறூப் நிருபர் 

Thu, 05/27/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை