மே முதல் வாரத்தில் இந்திய ஏற்றுமதியில் 80 வீத வளர்ச்சி

இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இந்திய ஏற்றுமதிகள் 7.04 பில்லியன் டொலர்களாக 80 வீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்று அந்நாட்டு வர்த்தன அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மே 1–7 வரை ஏற்றுமதிகள் 3.91 டொலர்களாக இருந்ததோடு 2019 மே மாதத்தின் இதே வாரத்தில் அது 6.48 ஆக பதிவானது.

2019இன் மே 1–7 காலப்பகுதியில் இறக்குமதிகளும் 8.86 பில்லியன் டொலர்களாக 80.7 வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதிகள் மூன்று மடங்காக அதிகரித்து 30.21 பில்லியனாக பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 10.17 பில்லியன் டொலர்களாக இருந்தது.

இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், சணல், விரிப்பு, கைவினைப் பொருட்கள், தோல், மின்சாதனப் பொருட்கள், எண்ணெய் சார்ந்த உணவுகள், பொறியியல், பெட்ரோலிய உற்பத்திகள், கடல்சார் உற்பத்திகள் மற்றும் இரசாயனங்கள் உட்பட பிரதான ஏற்றுமதி பொருட்களில் ஆரோக்கியமான வளர்ச்சியை காட்டியுள்ளது.

Wed, 05/12/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை