ஈராக் ஆர்ப்பாட்டங்களில் இருவர் பலி: 28 பேர் காயம்

ஜனநாயக ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெறும் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈராக் தலைநகர் பக்தாதில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டு மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டதில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் காயமடைந்திருப்பதோடு ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலில் ஐந்து பொலிஸார் காயம் அடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரச எதிர்ப்பு பிரசாரகரான இஹாப் அல் வஸ்னி கடந்த மே 9 ஆம் திகதி ஷியா முஸ்லிம்களின் புனித நகரான கர்பலாவில் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு முந்தைய தினத்தில் தெற்கு ஈராக்கில் முன்னணி ஊடகவியலாளரான அஹமது ஹசன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு அரச ஊழலுக்கு எதிரான எதிர்ப்பு அமைப்பு ஏற்பட்டது தொடக்கம் 70க்கும் அதிகமான செயற்பாட்டளர்கள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Thu, 05/27/2021 - 11:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை