சினோவெக் தடுப்பூசி இலங்கையில் உற்பத்தி

- இரு மாதங்களில் ஏற்பாடு
− அமைச்சர் சன்ன

சீன - இலங்கை கூட்டு உற்பத்தியாக சினோவெக் கொரோனா தடுப்பூசியை எதிர்வரும் இரண்டு மாத காலப்பகுதியில் நாட்டினுள் உற்பத்தி செய்ய எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.  

அத்துடன் சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் நேற்று (26) அதிகாலை நாட்டை வந்தடைந்தன.  

நேற்று (26) அதிகாலை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக குறித்த தடுப்பூசி தொகை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.தடுப்பூசிகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சரான பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்ட தரப்பினரும் இலங்கைக்கான சீன தூதுவரும் கலந்து கொண்டிருந்தனர்.சீனாவினால் முன்னதாகவும் இலங்கைக்கு 6 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தன. 

இதுவரை 80 நாடுகளுக்கு சீனா, கொவிட்-19 தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Thu, 05/27/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை